எனக்கு கச்சதீவு போற ஜோசனை ஒன்னும் இல்ல, ஆனா என் மூத்த அதிகாரி ஒருவர் தான் போகணும் எப்ப திருவிழா ? போறது என்ன மாதிரி ? அனுமதி எடுக்கணுமா ? கேட்டு சொல்லு எண்டு என்னிடம் கேட்டதன் பிரகாரம் கச்சதீவு சம்பந்தமா ஆராய வெளிக்கிட்டன்
இப்பத்தான் எல்லா போன் நம்பருகளும் இணையத்தில இருக்கே ! அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா கண்டுபுடிச்சன், போறதுக்கு பொமிசன் ஒன்னும் இல்ல, கடல்ல 06 மணித்தியாலப் பயணம், தலைக்கு 250/- அம்முட்டுத்தான் எண்டு.
சரி அந்த மனிசன் இந்த வயசில போகுதே ஆசைப்பட்டு, ஏன் நான் போகக்கூடாது எண்டு உதித்தது ஒரு எண்ணம். ஷ்கேச்ச(sketch) போட்டு திட்டம் வடிவமைச்சு போறதுக்கு நட்பு வட்டத்த கேட்ட எல்லாம் பயப்பிடுது கடல்ல 06 மணித்தியாலம் பயணம் எண்டதும்.
சரி போறது எண்டு பிளான் போட்டாச்சு இனி பின் வாங்கக்கூடாது எண்ட கொள்கை உறுதியுடன் திகதிக்காய் காத்திருக்க, நீர்கொழும்பு ஹாங்சி(gang) ஒன்னு என்னோட வரதுக்கு ரெடி ஆகிட்டு. 05 பொடிஸ் 03 பொண்ணுக
நேர்த்தியான திட்டமிடல் சக்கரவர்த்தி ஸ்ரீதரனின் வழிகாட்டலில் எல்லாம் ஒன்னு சேர்ந்தாங்க ஜப்னால(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பணத்தில இருந்து குறிக்கட்டுவானுக்கு இடைக்கால பாட்டுடன் கொச்சிக்கடை தமிழுடன் மினி பஸ்ஸில வெளிக்கிட்டம், நல்ல ஒரு பன்பலான பயணம் ஆரம்பிச்சுது. ஒண்டரை மணித்தியாலயம் என்னண்டு போச்சே எண்டு தெரியல குறிக்கட்டுவான் இறங்கு துறைல கொண்ணந்து விட்டன் மினி பஸ்காரன்.
அங்க நிறைய சனம் அப்போதான் வர பயப்பட யாலுவாக்கள நினைச்சு கவலையா இருந்துச்சு. பொடிஸ்ஸில இருந்து கிழடு கட்டை வரை லைனில நிக்கிறாங்க கச்சதீவு போறதுக்கு. நாமலும் லைனுக்கு போனம் இரத்தித்தில ஊறின ஒன்டாச்சே லைனில நிக்கிறது.
அங்க நிண்ட நேவி பெரியவன் "அடோ ஸ்ரீ மே வரிங்" எண்டான் பயந்திட்டன். பாத்தா அவன் என் முல்லைத்தீவு தொடர்பு. இப்ப இங்க மாற்றமாம். விடையத்த நானா விளக்க, தானும் அங்கதான் போறான் உன் ஆக்க்கள கூட்டி வா எண்டான், முந்தி பாத்து பயந்த அதிவேக பைவர் படகு கன்ஸ் எல்லாம் சுத்தி மூடி இருக்கு(?) இதில தான் போறம் எண்டான்.
ம்ம்ம்...
என்ன ஒரு பயணம் சுயிங் சுயிங் தான் இரண்டு மணித்தியாலத்தில இலங்கை உங்களை வரவேற்கிறது என்னும் பெயர்பலகை கண்ணில் பட்டது.
ஆட்டம் இல்ல !
அசைவு இல்ல !
கப்பலின் சுருதில மாற்றம் இல்ல !
அது பயணம் ......
மிகுதி பயணம் நாளை .......................
No comments:
Post a Comment