Wednesday, February 24, 2010

கடவுள் இருக்கிறாரா / இல்லையா ?? கடவுள் என்றால் யாரு ?

பலநாட்கள் யோசனையின் பின் நானும் ஒரு எழுத்தாளனாக ஆசைப்பட்டு இந்த ப்லோக்கை உங்களுக்கு சமர்பிக்கிறேன் 
தவறுகளை உடன் சுட்டிக்காட்டி என்னையும் ஒரு எழுத்தாளன் ஆக்குவீர்கள் என்று நம்பி ஆரம்பிக்கிறேன்

கடவுள் என்றால் என்ன ?? கடவுள் யார் ?? பண்டைக்காலத்தில் தரிசனம் தந்த கடவுள் என் இப்பொழுது தரிசனம் தருவதில்லை ??
விடைதெரியாத இந்த கேள்விகளுக்கு விளக்கம் எங்கே ?? 
நான் இந்திரா சௌதரராஜன் எனும் எழுத்தாளருடைய விசிறி அவருடைய கருத்துக்களில் இருந்து நான் பெற்றுக்கொண்டதை உங்களுடன் பகிர்கிறேன் 

கடவுள் என்றால் மின்காந்த சக்தி
எங்களை இயக்குவது அதுதான்... 
இந்து மதம், கிறிஸ்தவ மதம், புத்த மதம், இஸ்லாம் மதம் எந்த வழிபட்டு தலங்களை எடுத்துக்கொண்டாலும் பாருங்கள் அங்கு கலசம் போன்று ஒரு கூரான அமைப்பு ஒன்று உச்சியில் காணப்படும்,
அக்கூரான பகுதி இடி மின்னல் மூலம் வரும் சக்தியை உள்வாங்கி வழிபட்டு தலத்தின் மூலஸ்தான பகுதியில் தேக்கி வைத்திருகிறது, நாம் வழிபாட்டு தளங்களில் மன அமைதியாக வழிபாடு செய்யும் போது அம்மூலஸ்தான பகுதியில் இருக்கும் ஏற்றங்கள் நம்மீது பாய்கிறது இதுவே கடவுள் அருள் பாலிக்கிறார் என்பதாகும்.