Wednesday, March 26, 2014

கச்சதீவில் இருந்து சக்கரவர்த்தி

கச்சதீவு சிம்பிள்  எண்டு தான் வெளிக்கிட்டது, போய் இறங்கினப் பிறகு பாத்தா தான் தெரியுது எவ்வளவு விசேடம் எண்டு. கிட்டத்தட்ட ஒரு 100 க்கும் மேல ரோலர் படகு, இந்தியா இலங்கை என இரண்டு பேரும் வந்திருக்கினம்.

எங்கட போட்டில இருந்து இறங்கினதும் முதலாவது  சோதனை படிமுறைகள்.  கடந்து உள்ள போனா முதல்ல நான் பாத்தது இலங்கை வங்கியின் பணப்பரிமாற்றல் சேவை தொகுதி. அத தொடர்ந்து சில்லறைக் கடைத்தொகுதி பெரிதும் சிறிதுமாய்.


வவுனியல இருந்து வெளிக்கிட்டதுக்கு தண்ணி குடிக்கல நெடுந்தீவு பிரதேச சபை ஏற்பாட்டில தண்ணி வசதி ஒரு குறையும் இல்ல உண்டன குடிச்சிட்டு ஒரு ரவுண்ட் அடிச்சு பாத்தன் விதம் விதமாய் மனிதர்கள் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மன்னார், நெடுந்தீவு, நயினாதீவு என பல முகங்கள் இந்திய மக்களுடன் ஒவ்வொரின் தமிழும் ஒரு விதமாய் இருந்தது எனக்கு.

வந்ததுக்கு முதல்ல அந்தோனியார போய் கும்பிட்டுட்டு என்னோட குழுவோட சுத்திப் பாக்க வெளிக்கிட்டம் நேரம் பின்னேரம் 06.30 மணி இருக்கும்.

கடையள் களைகட்டி இருந்துச்சு, விசேடமா பண்டமாற்று யாவாரம் முதல் முறையா என் கண்ணு முன்னால நடந்திச்சு. ராணி சோப் நாங்க மறந்து பல காலம், ஆனா இந்திய யாத்திரீகர்கள் அத தான் விரும்பி வாங்கினாங்கள். சாப்பாட்டு கடை ஒண்ணுதான் இருந்திச்சு தேத்தண்ணி 50/- முள்ளிவாய்க்கால் விலை வைச்சு வித்தான். நாசமா போவான். வேண்டின காசுக்கு ஒழுங்கா தேத்தண்ணிய போடு அதுவும் இல்ல, கழனித்தண்ணி.

சரி இதுக்கு பிறகு அண்டைய பொழுதுக்கு மூணு வேலை இருக்கு,
1. கழிவகற்றல்
2. இரவு உணவு
3. நித்திரை

கழிவகற்றல் பொண்ணுகளுக்கும், ஆம்பிளையளுக்கும் தனித்தனியா 75இக்கும் மேல மலசலகூடம் கட்டி இருந்தாங்க, நானா அத பாவிக்கல, பத்த காடு இருக்கு, கடலம்மா இருக்கிறா, சிம்பிளா வேலைய முடிச்சிட்டம். காத்தாட போறதிலையும் ஒரு சுகம்.

அடுத்து இரவு உணவு, டீ விலை பாத்தப் பிறகு எனக்கு இரவு உணவு விலைய யோசிக்க கிர் என்னுச்சு, அந்த டைம்ல ஒரு அசரீரி மாதிரி எல்லாருக்கும் நேவிக்காரன் சாப்பாடு எண்டாங்கள், அவ், எப்பிடி இருந்திருக்கும் !!!
நூடில்ஸ் சமன்டின் உடன் லைனில நின்னு, அடிபுடிப்பட்டு டோக்கின குடுத்து சாப்பிட இருந்த ஒரு தமிழ்நாட்டு சொந்தம் பேசுது "உங்களுக்கு எல்லாம் ரோசம் இல்லையா அவன்ட கையால வேண்டிச்சாப்பிடனுமா" எண்டு, ரோசனரம்பு ஒண்ணுமே நமக்கு இப்ப வேலை செய்யுறது இல்ல, முறையான கேள்வி, ஆனா கேட்ட ஆள் தான் பிழை. நல்ல கட்டு கட்டிட்டு கையையும்  கழுவிட்டு நான் படுக்கைய பாக்க வெளிக்கிட்டன், இருந்தாலும் அந்த கேள்வி என் மனதில் ஆளப் படிந்து விட்டது.

நித்திரைக்கு கடக்கரைதான், டீம் அத விரும்பல அவங்க பனங்க்கூடல் கீழ படுக்க ஆசைப்பட்டுச்சு சரி யாமும் அவங்களுடன் உடன் பட்டு நித்தா கொள்ள போயிட்டம் வெறும் மணலில் துவாய விரிச்சு படுக்கிறது ஒரு தனி சுகம் தான். செம நித்திரை விடிய பிரேயர் சத்தத்துடன் முழிச்சிட்டன்.

விடிய எழும்பி லைட்டா முகத்த கழுவிட்டு பிரேயரில கொஞ்ச நேரம் இருந்துட்டு காலம சாப்பாட்ட வேண்டிட்டு, சாப்பிடல - ஒரு குற்ற உணர்வு.

லோஞ்சில வெளிக்கிற நேரத்த கேட்டு வெளிக்கிட்டு வந்தாச்சு. நேவிக்காரன் போட்டிலயும் ஏறல, லோஞ் தூக்கி தூக்கி அடிக்க 06 மணித்தியாலயப் பயணம் வயித்துக்குள்ள  இருந்தது எல்லாம் வெளிய வர றைய் பண்ண பலருக்கு வெளில வர என் பயணங்கள் இனிதே நிறைவடைந்தது.....



அடுத்த பயணக்குறிப்பு கௌதாரி முனைக்கு போகலாம் வாங்கோ ....

Thursday, March 20, 2014

கச்சதீவு பதுவை அந்தோனியார் பெருவிழா


எனக்கு கச்சதீவு போற ஜோசனை ஒன்னும் இல்ல, ஆனா என் மூத்த அதிகாரி ஒருவர் தான் போகணும் எப்ப திருவிழா ? போறது என்ன மாதிரி ? அனுமதி எடுக்கணுமா ? கேட்டு சொல்லு எண்டு என்னிடம் கேட்டதன் பிரகாரம் கச்சதீவு சம்பந்தமா ஆராய வெளிக்கிட்டன்

இப்பத்தான் எல்லா போன் நம்பருகளும் இணையத்தில இருக்கே ! அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா கண்டுபுடிச்சன், போறதுக்கு பொமிசன் ஒன்னும் இல்ல, கடல்ல 06 மணித்தியாலப் பயணம், தலைக்கு 250/- அம்முட்டுத்தான் எண்டு. 

சரி அந்த மனிசன் இந்த வயசில போகுதே ஆசைப்பட்டு, ஏன் நான் போகக்கூடாது எண்டு உதித்தது ஒரு எண்ணம். ஷ்கேச்ச(sketch) போட்டு திட்டம் வடிவமைச்சு போறதுக்கு நட்பு வட்டத்த கேட்ட எல்லாம் பயப்பிடுது கடல்ல 06 மணித்தியாலம் பயணம் எண்டதும்.

சரி போறது எண்டு பிளான் போட்டாச்சு இனி பின் வாங்கக்கூடாது எண்ட கொள்கை உறுதியுடன் திகதிக்காய் காத்திருக்க, நீர்கொழும்பு ஹாங்சி(gang) ஒன்னு என்னோட வரதுக்கு ரெடி ஆகிட்டு. 05 பொடிஸ் 03 பொண்ணுக 

நேர்த்தியான திட்டமிடல் சக்கரவர்த்தி ஸ்ரீதரனின் வழிகாட்டலில் எல்லாம் ஒன்னு சேர்ந்தாங்க ஜப்னால(யாழ்ப்பாணம்) 

யாழ்ப்பணத்தில இருந்து குறிக்கட்டுவானுக்கு இடைக்கால பாட்டுடன் கொச்சிக்கடை தமிழுடன் மினி பஸ்ஸில வெளிக்கிட்டம், நல்ல ஒரு பன்பலான பயணம் ஆரம்பிச்சுது. ஒண்டரை மணித்தியாலயம் என்னண்டு போச்சே எண்டு தெரியல குறிக்கட்டுவான் இறங்கு துறைல கொண்ணந்து விட்டன் மினி பஸ்காரன்.

அங்க நிறைய சனம் அப்போதான் வர பயப்பட யாலுவாக்கள நினைச்சு கவலையா இருந்துச்சு. பொடிஸ்ஸில இருந்து கிழடு கட்டை வரை லைனில நிக்கிறாங்க கச்சதீவு போறதுக்கு. நாமலும் லைனுக்கு போனம் இரத்தித்தில ஊறின ஒன்டாச்சே லைனில நிக்கிறது.

அங்க நிண்ட நேவி பெரியவன் "அடோ ஸ்ரீ மே வரிங்" எண்டான் பயந்திட்டன். பாத்தா அவன் என் முல்லைத்தீவு தொடர்பு. இப்ப இங்க மாற்றமாம். விடையத்த நானா விளக்க, தானும் அங்கதான் போறான் உன் ஆக்க்கள கூட்டி வா எண்டான், முந்தி பாத்து பயந்த அதிவேக பைவர் படகு கன்ஸ் எல்லாம் சுத்தி மூடி இருக்கு(?) இதில தான் போறம் எண்டான். 

ம்ம்ம்...

என்ன ஒரு பயணம் சுயிங் சுயிங் தான் இரண்டு மணித்தியாலத்தில இலங்கை உங்களை வரவேற்கிறது என்னும் பெயர்பலகை கண்ணில் பட்டது. 

ஆட்டம் இல்ல ! 
அசைவு இல்ல !
கப்பலின் சுருதில மாற்றம் இல்ல !
அது பயணம் ......

மிகுதி பயணம் நாளை .......................