Sunday, January 29, 2012

காட்டுக்குள் ஒரு உலா...

லொக்கேசன் : முல்லைத்தீவுக் காடு
இன்னைக்கு 29/01/2012 ஞாயித்துக்கிழமை ஆபிஸ்ல அரைநேரம் வேலை செய்து போட்டு மிச்ச நேரத்தை கழிக்க என்ன செய்யலாம் எண்டு திங் பண்ணிப் போட்டு ஆத்தில குளிப்பம் எண்டு போனா....... !!!!
அது நடுக் காட்டுக்குள்ள இருக்கிற ஆறு, அடர்ந்த வனம் சிங்கராஜா ஆச்சி செய்யுற காடு எண்டு வையுங்களன்.
போறதுக்கு இருக்கிறது ஒரு இரட்டையடிப் பாதை, மேல பாத்தா சூரியன் தெரியாது. அதுக்குள்ளால தான் அந்த பயணம். நல்ல சுவாரசியமாத்தான் இருந்தது.
(இடைவேளை)
முதல்ல நான் பாத்த மிருகம் மாடு, இரண்டாவதா பாத்த மிருகம் மாடு, மூணாவதாப் பாத்த மிருகம் மாடு, கடைசியாப் பாத்த மிருகமும் மாடு தான்.
தட் மீன் மாடு மட்டும் தான் இருந்துச்சு
அப்பிடியே கொஞ்சத்தூரம் போனா...
20க்கு X 20வது அடி சதுர கம்பி வேலி அதுக்குள்ளயும் கிட்டத்தட்ட 15 - 20 மாடுகள் ஏன் அதை அப்பிடி அடைச்சு வைச்சிருக்காங்க எண்டு எனக்கு தெரியாது....
(நான் சொல்லல அது இறைச்சிக்குக்கு போகுது எண்டு)
அப்பிடியே தொடர்ந்து போனா, நல்ல பெறுமதியான மரங்கள் விழுந்து இருக்கு, சில நேரம் அது காத்துக்கு விழுந்து இருக்கலாம் என... நீங்களும் அப்பிடியே நினையுங்கோ.....
நானும் ஆத்தைப் பாக்கணும் எண்டு தீரா ஆசைல போய்க்கிட்டே இருக்கிறன், திடீரெண்டு ரக்ரர் சத்தம், அப்பா சன நடமாட்டம் உள்ள இடத்துக்கு வந்திட்டன் எண்டா.... ஒரு ரக்ரர் மட்டும் வருது, ரக்ரர் காரன் என்னைய பாத்து பம்முரார்.
இவன் ஏன் என்னையப் பாத்து பம்முறான் எண்டா !!! “மணல்”
”சேர் !!! நான் வாரன் சேர், பெரிய சேரிட்ட சொன்னான்”   அதுக்குள்ள உது வேற, அவன் நினைச்சுட்டான் நான் அவயளாக்கும் எண்டு...
இப்பிடி இருக்கையா காட்டுக்குள்ள பயணம், உதுக்குப் பிறகு யாரும் போவானாங்கிறன், பைக்கைத்திருப்பிக்கிட்டு திரும்பிப்பாக்காம வந்திட்டம் இல்ல...
எப்பிடி இருந்த காடு இப்பிடி ஆகிட்டே !!!!