Sunday, December 25, 2011

மாதச் சம்பளம்

எழுதக்கூடாது தான்.... சரி சும்மா ரைம் பாஸுக்கு

இஞ்சயங்கோ மாதம் 25ஆம் திகதி வருகுது எண்டால் தான் முகத்தில ஒரு புன்சிரிப்பு வரும் ஏன்னா அது தான் சலரி டே...
ஆனா அதிலஜும் 50%க்கு மேல லோன் மிஞ்சுறதில அந்த அண்டே பார்ட்டி முதல் வேலை அதுக்குப்பிறகு வேண்டின சின்ன சின்ன கடனுகள் மச்சான் 100/- தா 200/- தா சம்பளத்தோட தாரன் (உது தான் கட்டாயம் குடுக்க வேண்டிய கடன் ஏன்னா அப்பத்தான் அடுத்த முறையும் வேண்டலாம்)  அப்பிடி வேண்டினது கொடுக்கணும், அட அதுக்கப்புறம் வீட்டுக்கு கொஞ்சமாவது கொடுக்கணும் இல்லைன்னா... வீட்டில “ஜ்ஹைஅஜ்ஃபச்க்ஃப்னச்,ம்ச்வட்ஜ்க்வ்” வாங்கணும்..
உது எல்லாம் முடிய பாத்தா என் அக்கவுண்டில இருக்கிறது எப்பிடியும் ஒரு 4,000/ இக்குள்ள தான் அத வைச்சுத்தான் அடுத்த 25ஆம் திகதி மட்டும் ஓடனும்.

இப்பிடி வாழ்கை ஓடிக்கிட்டு இருக்கேக்க வந்து என்கிட்ட கடன் கேப்பானுங்க அப்ப வரும் ஒரு கடுப்பு, அப்ப என்னத்தை சொல்லுவன் எண்டு நினைக்கிறியள் மச்சான் காட்டை விட்டுட்டு வந்திட்டன் சொறிடா... டீசெண்டு மெயிண்டன் பண்ணுவன். இன்னும் சிலர் சொல்லுவாங்க ”உங்களுக்கு என்ன.” போட்டு கும்மோனும் போல இருக்கும், ஆனா இதில எப்புடி மெயிண்டன் பண்ணுவன் தெரியுமா “புன்னகை”. அது கேட்டவனைப் பாத்து இல்ல அது என்னையப் பாத்து தானுங்கோ.

ஹும்ம்ம்ம்....
என்ன வாழ்க்கைடா ஸ்ரீதரா....


நான் காதலிக்கிறேன்.

நான் காதலிக்கிறேன், ஆமாங்க என் காதல் மாதிரி ஒருத்தர் காதலும் இருக்காதுங்கோ பாருங்க. ஏன்னா எனக்கு காதலி இருக்காவா எண்டு எனக்கே தெரியாது. இருந்தா இருப்பா எண்டு நினைச்சுக் கிட்டு காதலிச்சுகிட்டே இருக்கன் நான்.
அது ஒரு காலம் அழகிய காலம் எண்டு பாடிக் கொண்டு நினைவுகளை மென்று காலத்தை ஓட்டிக்கிட்டு வாய்ச்சவடால்களை விட்டுக்கிட்டு வெட்டியா பந்தாவா ..
சில நேரத்தில என்னைய நினைத்து நானே சிரித்த சமயங்கள் அதிகம், அதுக்காக என்னைய பைத்தியம் எண்டு நினைச்சுப் போட வேணாம்...

இப்பவும் பாருங்க உதை வாசிக்கிற நீங்க நினைக்கலாம் என்ன கறுமாந்திரம் புடிச்சவன் டா இவன் உதை எல்லாமா எழுதுறது எண்டு, ஆனா நீங்க அப்பிடி நினச்ச அது தப்புங்கோ...
ஏன்னா இது உதவாக்கரைப் பேச்சு.....

எதைக் காட்டுது...



ஆனையிறவில வைச்சு இருக்கிற இயக்கத்தின டாங்கியும் தலைவரின் வீடு எண்டு காட்டுற புதுக்குடியிருப்பில உள்ள நிலக்கீழ் வீடும் எதுக்காக சனத்துக்கு காட்டுகினம் தெரியுமோ....

பாருங்கோ பாருங்கோ இந்த தமிழர் எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே இப்புடி டாங்கி, நான் நினைக்கிறன் 1993 காலப்பகுதி வடிவமைப்பு எண்டு. மத்தது தலைவரிண்ட மூன்று மாடி நிலக்கீழ் வீடு யாரால முடியும் சொல்லுங்க. சும்மா ஒரு வீடு கட்டவே எவ்வளவு குய்யோ முய்யோப் படனும். உது நிலக்கீழ் வீடு அதுவும் தனிக்காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம....

அதக் காட்டி தமிழரின் பெருமையைத்தான் சொல்லுகினம் சரியோ....

ஆனா என்ன உதை எங்கட சனம் பெருமையா சொல்லப் பயப்படுது, என்ன செய்ய ???