Monday, September 15, 2014

பன்சல விஜயம் – ராஜமகா விகாரை கலேவல


எமது நிறுவன ஊழியர்களுடன் 13/09/2014 காலையில் குருணாகல் ராஜமகா விகாரையில் சிரமதானம் செய்வதற்காய் புறப்பட்டேன். விருப்பமில்லா பயணம். காலையிலேயே சிறுதடங்கல் இருந்தும் புறப்பட்ட பயணம் நிறுத்தக்கூடாது என்பதற்காய் விஜயத்தை தொடந்தேன்.


தந்தை தடுக்க, சிற்றன்னை முகம் சுழிக்க, உண்மையில் எனக்கும் மனம் சரியின்றி, மேலதிகாரியின் கட்டாய உத்தரவுக்கமைய புறப்பட்டேன் பன்சலையில் சிரமதானம் செய்ய. நான் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன், முற்றாக மறுத்தால் பெரும்பான்மை ஒதுக்கிவிடும். அதனையும் மனத்தில் கொண்டு சரி என புறப்பட்டேன்.

குருணாகலில் இருந்து கிட்டத்தட்ட 10 Km தூரம் உள்ளுக்குள் செல்ல வேண்டும். நாம் சென்ற வாகனத்தை எமது நிறுவன அனுராதபுர கிளை முகாமையாளர் குருணாகல் வீட்டில் நிறுத்தி விட்டு அவருடன் நாம் உழவு இயந்திரத்தில் புறப்பட்டோம் சிறுத்தைக் காட்டுக்குள். காடு அடர் காடு. 40 Km இக்கும் மேல் பயணம். வேடர் வாழும் காடு அது. இறுதியில் உழவு இயந்திரம் ஒரு மலையடி வாரத்தில் நிறுத்தப்பட்டது.
சில்காற்று உடலை வருடி செல்ல, முற்றாக நவீன உலகுடன் தொடர்பே இல்லாத உலகம் எம்மை அரவணைத்தது. மலையடிவாரத்தில் இருந்து மேலே Man vs Wild ப்ரோகிராமில் வரும் உத்திகளை கையாண்டு மலை உச்சிக்கு ஒற்றையடி பாதையில் ஏறிப் போனோம். மலை என்று சொல்வதை விட குன்று எனும் பதம் சிறப்பாய் இருக்கும். அக்குன்றில் மேலே கல் இடைவெளிகளுக்கு மத்தியில் சிறிய பன்சல அது சில நுற்றாண்டு காலம் பழமை வாய்ந்த சிற்பங்களுடன் கூடிய புத்த கோவில். அங்கு எமக்கு வழங்கப்பட்ட பணி கோவிலுக்கு போகும் பாதையை செப்பனிட வேண்டும்.
மிகவும் ரம்மியமான காலநிலையுடன் நாம் எமது வேலையை செய்தோம்.
மலையடிவாரத்தில் கொட்டப்பட்ட 15 கியுப் சிவப்பு மணலை கொண்டு 50M நீளமான பாதை அமைக்க வேண்டும். முதலில் வேலை இலகுவாக இருந்தாலும் மேலே போகப் போக சப்பா .....

புதிதாக போட்ட பாதை என்பதாலும் உயரத்துக்கு தள்ளவேண்டி இருந்ததாலும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மண்ணைப் போட்டு கிட்டத்தட்ட ஒரு 15 M போட்டு அன்றைய வேலையை முடித்தோம். அதன் பின்பு ஒரு தெளிந்த நீர் கொண்ட ஓடும் குளிர் அருவியில் ஒரு மணித்தியாலம் மேல் குளியல் போட்டு வெளி வர விருப்பின்றி யானையின் பிளிறல் ஒலி கேட்க விகாராதிபதி யானை வருது எண்டதும் அருவியில் இருந்து எப்பிடி விகாரைக்கு வந்தோம் எண்டு தெரியாது விகாரைக்கு வந்து சேர்ந்தோம்.
வெண் நிலவொளியில் தாமரை இலையில் கிரிபத்தும் (வெண்சோறு) கட்டை சாம்பலும் உடல் அலுப்புக்கு தேவாமிர்தம் போல ஒரு பிடி பிடித்து அமத்துரு (தலைமை புத்த பிக்கு)வின் போதனை கேட்டு பின் உறங்கசென்றோம். உண்மையில் அவர் ஒரு வித்தியாசமான ஒருவர் உண்பது பிச்சை எடுத்து. பிச்சை கேட்டு சென்று தான் உண்கிறார். இரவு உணவின் பின் அவர் என்னுடன் சிங்கள தமிழில் கதைத்தார். சிறந்த அறிவுரைகள் தந்தார். என்னை வாயை மூடி காதால் கதைக்க சொன்னார். சித்தர் வாக்கு போல இருந்தது. கருத்துக்கள் பல கொண்ட பேச்சு.

அடுத்த நாள் காலை மரவள்ளி கிழங்கும் பச்சை மிளகாயும் சாப்பாடு. சாப்பாடு முடிந்ததும் அங்கு கூடி இருந்த எல்லா மக்களுடன், வேடுவர் உள்ளடங்கலாக எம்முடன் வந்து மிகுதி வேலை வேலை செய்ய உதவினர். வேலை பாத்துக் கொண்டிருக்க முடிந்தது. வேலை 11.00 மணியளவில் முடிந்ததும் நாயக்க ஆமத்துரு சிறு சொற்பொழிவு ஆற்றினார். அதன் சாராம்சம் வருமாறு. “இந்த வேலை ஒரு பக்கோ இயந்திரத்தை கொண்டு செய்வது பெரிய வேலை இல்லை, வேலை உடன் முடிந்து விடும். ஆனால் அதில் ஒரு திருப்தி இருக்காது. நீங்கள் இப்பாதை பயன் படுத்தும் போது உங்களுக்கு ஒரு மன மகிழ்வு உண்டாகும்”  அவர் சொல்லுறதும் சரிதான்.
போட்ட பாதைய பாக்கும் போது ஒரு நிறைவு வருது தான். இனிதேமுடிந்து திரும்பினோம் நாம். 

Thursday, August 07, 2014

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை எவ்வாறு அறியலாம்




இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது.

இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.

மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார்.

அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார். இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

Saturday, August 02, 2014

இரு தேசம் ஒரு நாடு | Two Nations One Country

புவியியல், பொருளாதாரம், மக்கள் அனைத்தும் வேறு வேறு பிறகு ஏன் ஒரு நாடு !!!

புவியியல் 
அங்க மழை சோ எனப் பெய்யுது, இங்க எல்லாம் காய்ஞ்சு கருகுது.
இங்க இல உதிர்கைல அங்க இல துளிர் காலம்



பொருளாதாரம்
அங்க திறந்த பொருளாதாரம் இங்க மூடிய பொருளாதாரம்



மக்கள் 
இங்க திராவிடன் அங்க ஆரியன்


Friday, August 01, 2014

ஆபீஸில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி ? How to Score more in Appraisal at Office?

ஒரு பாம்பு ஒபிசுக்குள்ள வந்திட்டு அத இரண்டு பேர் எப்பிடி மேலிடத்துக்கு ஒப்பிக்கிறாங்க எண்டுறத  பாருங்க















Worker - 01
சேர் ! பாம்பு ஒண்டு வந்திச்சு அத அடிச்சு குப்பைல போட்டுட்டன்

Worker - 02
சேர் ! ஒரு பெரிய பாம்பு சேர் விடிய நான் ஒபிசுக்கு வரேக்க இருந்துச்சு, நல்ல கருப்பு சேர், நீட்டு, நான் சரியாப் பயந்து போட்டன், ஒபிசுக்கு உள்ளுக்குள்ள போகவே இல்ல, அது சேர் என்னைப் பாத்து சீறிச்சு சேர், நான் சத்தம் இல்லாம வெளியால வந்து கதவ சாத்திப் போட்டு வெளியால நின்னு தான் பாத்தன்.

அது அப்பிடியே என்னைப் பாத்தபடி வந்து மேசைக்கு மேல ஏறி பூச்சாடிய உருட்டிப் போட்டுது, பேந்து அப்பிடியே வந்து குப்பைக் கூடைக்குள்ள போச்சு சேர். சடும் எண்டு வெளில வந்து யன்னல் பக்கமா வந்து என்னையே பாத்தபடி யன்னலால வெளியால போட்டு சேர். எனக்கு சரியா பயமா இருக்கு சேர். நான் பயந்து பயந்து தான் உள்ளுக்கு இருந்து வேலை செய்யுறன் சேர்.  பாம்பு எப்ப திரும்ப வருமோ தெரியா சேர். பாம்பு வந்தா நான் உங்களுக்கு சொல்லுறன் சேர்.

இப்பத்தே காலத்தில இரண்டாவது ஆளுக்குத் தான் காலம். முதலாவது ஆள் வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு இருப்பான். ஆனா தான் கஷ்டப்பட்டத வெளியால சொல்ல மாட்டான். அவனுக்கு எந்த மதிப்பும் இல்ல,

ஆனா இரண்டாவது ஆள் ஒண்ணுமே இல்லை. ஆனா அவனுக்குத்தான் இந்த காலம் மதிப்புக் குடுக்குது. புள்ளியும் கூட கிடைக்கும். திறமைக்கு மதிப்பு இல்ல, வாய் பேச்சுக்கு மட்டும் தான் எல்லாம் !




-------------------------------------------------------------------------------------
இது நான் கன நாளா எழுத ஜோசிச்ச விஷயம் இத நான் எழுதுறதால எனக்கு எதிர்ப்புகள் வரவும் நிறைய சான்ஸ் இருக்கு (அவ்வ்)

குற்றமுள்ள ஆக்கள் பிலீஸ் அமைதி காக்கவும்

--------------------------------------------------------------------------------------


Wednesday, July 30, 2014

First Time Love Poems

படித்ததில் சுவாரசியமானது 

சிரிக்க மட்டும், சிந்திக்க அல்ல !!! ஓ.கே !!!!!

மின்னஞ்சல் தொகுப்புக்களில் ஒன்று ..........


-----------------------------------------------------------------------------------


I wrote this for my second girlfriend but never got to give it to her. Will You...?
©James


Will you be my Valentine?
The Bonnie to my Clyde;
The bacon to my eggs;

Will you be mine?
Will you be the Juliet to my Romeo?
The sweet to my sour;
The Bluebonnets to my Texas;
Will you be mine?
Will you be the Flour to my Tortilla?
The Dot to my Com;
The Bluebell to my Ice cream;
Will you be mine?
Will you be my first kiss?
The one who is there for me;
The romantic to my hopelessly;
Will you be mine?

Thursday, July 24, 2014

நித்தம் நித்தம் சாவு உன் மேல் கொண்ட காதலாலே !!!


என்னை நிறைய பீல் பண்ண வைச்ச பாட்டு பழனி பாரதியின் வரிகள் என்னைக் கொல்லுது, கிட்டத்தட்ட இப்ப ஏழாவது தடவை எண்டு நினைக்கிறான், கேட்டுக்கிடே இருக்கன். 

வாவ், சரியா பழனி பாரதி என்னை மாதிரியே திங் பண்ணுறான். 

சுப்பர். இன்னைக்கு வேலை செய்யணும் எண்டதையே மறந்து இந்த பாட்டோடையே இருக்கலாம் போல இருக்கு ....


படம்  - பாலா 
பாடகர் - சங்கர் மகாதேவன்
பாடல் வரிகள் - பழனி பாரதி 



என் கண்ணை பிடிங்கி கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு

யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹைஐஐயையோ 

சிற்பம் போல இந்த உடல் - நான் தொட்டு பார்த்ததும் குழைகிறதே
எங்கே எங்கே உந்தன் இடை தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கல்லையே 

ஓஓஓ கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய்வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னாள் படுத்து மறியல் பண்ணுதே

கூந்தல் சாட்டையைத் சுழற்றுகிறாய், கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய்
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோன்றுதே

அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே - பெண்ணே உந்தன் காதலாலே

வா வா வா வந்து தீண்டிவிடு
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே

என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே

காதல் என்பது வன்முறையா
கண்கள்தான் அதன் செய்முறையா ?
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே

பெண்மை என்பது எரிமலையா ?
பூவில் சிந்திடும் பனிமலையா ?
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வளையுதே
மனம் இன்று பொம்மை ஆனதே - பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையை ஆட்டுதே - உன்னை கண்டு ஆசையாலே

வா வா வா வந்து விளையாடு ......

என் கண்ணை பிடிங்கி கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு

யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹைஐஐயையோ

I dedicate this Song to my #LovingRatsashi, I love you dii ...



Tuesday, April 22, 2014

கிளி வாங்க - போங்க கௌதாரிமுனை 14+



வணக்கம் நண்பர்களே,
மாசக் கடைசிலயும் வேலைகள் எல்லாத்தையும் ஒதுக்கி கொஞ்சம் நிமிர்ந்து நிக்க முடியுது அதனால இந்த பதிவ அந்த கப்புக்குள்ள தாரன். இது கொஞ்சம் செக்ஸியாகவும் இருக்கும். விரும்பினா வாசியுங்க இல்லாட்டா பேசிட்டு போங்க.

உண்மைப்பயணம் நானும் அப்பாவும் துஜியும் ஜெகனும் போனது. கவர்ச்சிக்காக அவங்கள எல்லாம் அப்புறப்படுத்தி பயணிகளாக நானும் என் கனவுக் காதலி சிரேயாவும் போகப்போறம் வாறிங்களா போவம் ....

எனக்கு என் காதலி கூட நீண்ட தூரம் பயணம் செய்ய சரியான ஆசை, கன நாளா கேட்டு ஒரு ஞாயித்துக்கிழமை போறதுக்கு ஓம் எண்டாள், மோட்ட சைக்கிள்ள போறது தான் பிளான் அப்போ தானே அவ என்னைக் கட்டி புடிச்சிட்டு இருப்பாள். பட் அவ அதுக்கு ஒத்துக்கல 14 ஸ்ரீ ல தான் போகணும் எண்டாள் பிடிவாதக் காரி, சரி, எல்லாம் நன்மைக்கு தான் எண்டு நானும் காரில கிளி வாங்குற பெட்டியும் எடுத்து கொண்டு குடிக்க தண்ணியும் எண்டுத்து போட்டு கிட்டு வீட்டில தனியா தான் போறான் எண்டு சொல்லிட்டு வெளிக்கிட்டன்.

அப்பப்பா என்ன அட்வைஸ்

தம்பி சிலோவா போகணும்,
தனிய போறா நித்திர தூங்க்கினா கார ரோட்டு ஓரமா நிப்பாட்டி முகத்த கழுவிட்டு போகணும்,
அப்பிடியும் நித்திர வந்தா கொஞ்சம் நித்திர கொண்டுட்டு போகணும்
மிண்ட் ஏதாவது வாங்கி வைச்சுக்கொண்டு போகணும்
என்னவும் எண்டா கோல் எடு டா .....

ஓம் அப்பா ஓம், சரி அப்பா சரி, நான் போட்டு வாறன் அப்பா

முடியல ம்ம் ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு

இம்மிடியட்லி, படலய தாண்டின கையோட  ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்னு
"Beauty, I am leaving from Home, be ready. I will be there within 10 min"


எப்பிடி போனான் எண்டு சத்தியமா தெரியாது, நாலு நிமிஷம் இல்ல தாண்டிக்குளம் போய்ட்டன், போய் என் டாலுக்கு கோலப் போட "மெசேஸ் வருது "டோன்ட் பி ஹரி, நொவ் ஒன்லி யு செண்ட் மீ தி மெசேஜ், ஐ வில் கம் வெறி சூன்." இதுக்கு பிறகு அவள ஏதும் கேட்டா எல்லாமே பிசகிடும். பிளான் போட்டது கிட்டத்தட்ட ஒரு மாசம் முன்னாடி ஆனா அப்பிடித்தான் மெசேஸ் வரும் பொறுத்துக் கொள்ளனும் விவாதம் செய்யப் போகக் கூடாது. 

கிட்டத்தட்ட 45 நிமிச காத்திருப்புக்கு பிறகு பைங்கிளி வந்திறங்கினா, கொஞ்சம் லேட்டாகிட்டுடா ("கொஞ்சம்") எண்டு கொஞ்சும் குரல்ல சொல்லிகிட்டு, அவ்வளவும் காணுமே, நோ பேபி, இஸ்ட்  ஓகே, இட் இஸ் நாட் மச் டிலே, வில் வி மூவ். கடுப்புத்தான் இருந்தாலும் கொஞ்சும் குரல்ல சொன்ன பிறகு எப்பிடி சண்டை பிடிக்க தோணும். 

அவளுக்கு வேகமா போனாத்தான் பிடிக்கும் ஆனா வாகனம் ஏதும் இருக்க கூடாது. இருந்தா மெதுவாக தான் போக சொல்லுவாள். நான் ஒரு 80தில பிடிச்சுக் கொண்டு ஓமந்தை நோக்கி வண்டிய செலுத்தினேன். இனிய காலைப் பொழுது முகத்தில குளிர் காத்து அடிக்க காதலியின் செல்ல கதையுடன் சிரிப்பொலி வண்டி முழுதும் பரவ ஒரு இனிய காதல் பயணம் கௌதாரி முனை நோக்கி தொடங்கியது. 




Wednesday, March 26, 2014

கச்சதீவில் இருந்து சக்கரவர்த்தி

கச்சதீவு சிம்பிள்  எண்டு தான் வெளிக்கிட்டது, போய் இறங்கினப் பிறகு பாத்தா தான் தெரியுது எவ்வளவு விசேடம் எண்டு. கிட்டத்தட்ட ஒரு 100 க்கும் மேல ரோலர் படகு, இந்தியா இலங்கை என இரண்டு பேரும் வந்திருக்கினம்.

எங்கட போட்டில இருந்து இறங்கினதும் முதலாவது  சோதனை படிமுறைகள்.  கடந்து உள்ள போனா முதல்ல நான் பாத்தது இலங்கை வங்கியின் பணப்பரிமாற்றல் சேவை தொகுதி. அத தொடர்ந்து சில்லறைக் கடைத்தொகுதி பெரிதும் சிறிதுமாய்.


வவுனியல இருந்து வெளிக்கிட்டதுக்கு தண்ணி குடிக்கல நெடுந்தீவு பிரதேச சபை ஏற்பாட்டில தண்ணி வசதி ஒரு குறையும் இல்ல உண்டன குடிச்சிட்டு ஒரு ரவுண்ட் அடிச்சு பாத்தன் விதம் விதமாய் மனிதர்கள் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மன்னார், நெடுந்தீவு, நயினாதீவு என பல முகங்கள் இந்திய மக்களுடன் ஒவ்வொரின் தமிழும் ஒரு விதமாய் இருந்தது எனக்கு.

வந்ததுக்கு முதல்ல அந்தோனியார போய் கும்பிட்டுட்டு என்னோட குழுவோட சுத்திப் பாக்க வெளிக்கிட்டம் நேரம் பின்னேரம் 06.30 மணி இருக்கும்.

கடையள் களைகட்டி இருந்துச்சு, விசேடமா பண்டமாற்று யாவாரம் முதல் முறையா என் கண்ணு முன்னால நடந்திச்சு. ராணி சோப் நாங்க மறந்து பல காலம், ஆனா இந்திய யாத்திரீகர்கள் அத தான் விரும்பி வாங்கினாங்கள். சாப்பாட்டு கடை ஒண்ணுதான் இருந்திச்சு தேத்தண்ணி 50/- முள்ளிவாய்க்கால் விலை வைச்சு வித்தான். நாசமா போவான். வேண்டின காசுக்கு ஒழுங்கா தேத்தண்ணிய போடு அதுவும் இல்ல, கழனித்தண்ணி.

சரி இதுக்கு பிறகு அண்டைய பொழுதுக்கு மூணு வேலை இருக்கு,
1. கழிவகற்றல்
2. இரவு உணவு
3. நித்திரை

கழிவகற்றல் பொண்ணுகளுக்கும், ஆம்பிளையளுக்கும் தனித்தனியா 75இக்கும் மேல மலசலகூடம் கட்டி இருந்தாங்க, நானா அத பாவிக்கல, பத்த காடு இருக்கு, கடலம்மா இருக்கிறா, சிம்பிளா வேலைய முடிச்சிட்டம். காத்தாட போறதிலையும் ஒரு சுகம்.

அடுத்து இரவு உணவு, டீ விலை பாத்தப் பிறகு எனக்கு இரவு உணவு விலைய யோசிக்க கிர் என்னுச்சு, அந்த டைம்ல ஒரு அசரீரி மாதிரி எல்லாருக்கும் நேவிக்காரன் சாப்பாடு எண்டாங்கள், அவ், எப்பிடி இருந்திருக்கும் !!!
நூடில்ஸ் சமன்டின் உடன் லைனில நின்னு, அடிபுடிப்பட்டு டோக்கின குடுத்து சாப்பிட இருந்த ஒரு தமிழ்நாட்டு சொந்தம் பேசுது "உங்களுக்கு எல்லாம் ரோசம் இல்லையா அவன்ட கையால வேண்டிச்சாப்பிடனுமா" எண்டு, ரோசனரம்பு ஒண்ணுமே நமக்கு இப்ப வேலை செய்யுறது இல்ல, முறையான கேள்வி, ஆனா கேட்ட ஆள் தான் பிழை. நல்ல கட்டு கட்டிட்டு கையையும்  கழுவிட்டு நான் படுக்கைய பாக்க வெளிக்கிட்டன், இருந்தாலும் அந்த கேள்வி என் மனதில் ஆளப் படிந்து விட்டது.

நித்திரைக்கு கடக்கரைதான், டீம் அத விரும்பல அவங்க பனங்க்கூடல் கீழ படுக்க ஆசைப்பட்டுச்சு சரி யாமும் அவங்களுடன் உடன் பட்டு நித்தா கொள்ள போயிட்டம் வெறும் மணலில் துவாய விரிச்சு படுக்கிறது ஒரு தனி சுகம் தான். செம நித்திரை விடிய பிரேயர் சத்தத்துடன் முழிச்சிட்டன்.

விடிய எழும்பி லைட்டா முகத்த கழுவிட்டு பிரேயரில கொஞ்ச நேரம் இருந்துட்டு காலம சாப்பாட்ட வேண்டிட்டு, சாப்பிடல - ஒரு குற்ற உணர்வு.

லோஞ்சில வெளிக்கிற நேரத்த கேட்டு வெளிக்கிட்டு வந்தாச்சு. நேவிக்காரன் போட்டிலயும் ஏறல, லோஞ் தூக்கி தூக்கி அடிக்க 06 மணித்தியாலயப் பயணம் வயித்துக்குள்ள  இருந்தது எல்லாம் வெளிய வர றைய் பண்ண பலருக்கு வெளில வர என் பயணங்கள் இனிதே நிறைவடைந்தது.....



அடுத்த பயணக்குறிப்பு கௌதாரி முனைக்கு போகலாம் வாங்கோ ....

Thursday, March 20, 2014

கச்சதீவு பதுவை அந்தோனியார் பெருவிழா


எனக்கு கச்சதீவு போற ஜோசனை ஒன்னும் இல்ல, ஆனா என் மூத்த அதிகாரி ஒருவர் தான் போகணும் எப்ப திருவிழா ? போறது என்ன மாதிரி ? அனுமதி எடுக்கணுமா ? கேட்டு சொல்லு எண்டு என்னிடம் கேட்டதன் பிரகாரம் கச்சதீவு சம்பந்தமா ஆராய வெளிக்கிட்டன்

இப்பத்தான் எல்லா போன் நம்பருகளும் இணையத்தில இருக்கே ! அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா கண்டுபுடிச்சன், போறதுக்கு பொமிசன் ஒன்னும் இல்ல, கடல்ல 06 மணித்தியாலப் பயணம், தலைக்கு 250/- அம்முட்டுத்தான் எண்டு. 

சரி அந்த மனிசன் இந்த வயசில போகுதே ஆசைப்பட்டு, ஏன் நான் போகக்கூடாது எண்டு உதித்தது ஒரு எண்ணம். ஷ்கேச்ச(sketch) போட்டு திட்டம் வடிவமைச்சு போறதுக்கு நட்பு வட்டத்த கேட்ட எல்லாம் பயப்பிடுது கடல்ல 06 மணித்தியாலம் பயணம் எண்டதும்.

சரி போறது எண்டு பிளான் போட்டாச்சு இனி பின் வாங்கக்கூடாது எண்ட கொள்கை உறுதியுடன் திகதிக்காய் காத்திருக்க, நீர்கொழும்பு ஹாங்சி(gang) ஒன்னு என்னோட வரதுக்கு ரெடி ஆகிட்டு. 05 பொடிஸ் 03 பொண்ணுக 

நேர்த்தியான திட்டமிடல் சக்கரவர்த்தி ஸ்ரீதரனின் வழிகாட்டலில் எல்லாம் ஒன்னு சேர்ந்தாங்க ஜப்னால(யாழ்ப்பாணம்) 

யாழ்ப்பணத்தில இருந்து குறிக்கட்டுவானுக்கு இடைக்கால பாட்டுடன் கொச்சிக்கடை தமிழுடன் மினி பஸ்ஸில வெளிக்கிட்டம், நல்ல ஒரு பன்பலான பயணம் ஆரம்பிச்சுது. ஒண்டரை மணித்தியாலயம் என்னண்டு போச்சே எண்டு தெரியல குறிக்கட்டுவான் இறங்கு துறைல கொண்ணந்து விட்டன் மினி பஸ்காரன்.

அங்க நிறைய சனம் அப்போதான் வர பயப்பட யாலுவாக்கள நினைச்சு கவலையா இருந்துச்சு. பொடிஸ்ஸில இருந்து கிழடு கட்டை வரை லைனில நிக்கிறாங்க கச்சதீவு போறதுக்கு. நாமலும் லைனுக்கு போனம் இரத்தித்தில ஊறின ஒன்டாச்சே லைனில நிக்கிறது.

அங்க நிண்ட நேவி பெரியவன் "அடோ ஸ்ரீ மே வரிங்" எண்டான் பயந்திட்டன். பாத்தா அவன் என் முல்லைத்தீவு தொடர்பு. இப்ப இங்க மாற்றமாம். விடையத்த நானா விளக்க, தானும் அங்கதான் போறான் உன் ஆக்க்கள கூட்டி வா எண்டான், முந்தி பாத்து பயந்த அதிவேக பைவர் படகு கன்ஸ் எல்லாம் சுத்தி மூடி இருக்கு(?) இதில தான் போறம் எண்டான். 

ம்ம்ம்...

என்ன ஒரு பயணம் சுயிங் சுயிங் தான் இரண்டு மணித்தியாலத்தில இலங்கை உங்களை வரவேற்கிறது என்னும் பெயர்பலகை கண்ணில் பட்டது. 

ஆட்டம் இல்ல ! 
அசைவு இல்ல !
கப்பலின் சுருதில மாற்றம் இல்ல !
அது பயணம் ......

மிகுதி பயணம் நாளை .......................

Saturday, January 04, 2014

உதயகலா

வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு நபர்

தொடர் விரைவில்

தொடரே தேவை இல்லை, இங்க பல தொடர் வந்து கொண்டிருக்கு ...

http://www.jvpnews.com/srilanka/69083.html

http://www.athirvu.co.uk/target_news.php?action=fullnews&id=1250

http://www.newjaffna.com/fullview.php?id=Mzk4MTk=

http://www.jvpnews.com/srilanka/69383.html

இந்த மேடத்துக்கு நான் பத்து இலட்சம் குடுத்திருப்பன் தப்பிட்டன்,

தாங்க்ஸ் கேசிக்கா மங்களராஜன் கஜன்