Wednesday, September 09, 2015

தப்பித்தேன் நான், தொடர்ந்து வருவேன் !!!!!


உங்க பாருங்க யாழ்ப்பாணத்தில முக்காவாசி புகையிரத கடவையல் வெறும் சிவப்பு மஞ்சள் லைட்டால தான் கொன்ரோல் பண்ணுறாங்கள். கிட்டப் போனா "பாம் பாம்" எண்டும் கத்தும் சிவப்பு லைட் எரியேக்க. 


நான் வழமையா வேலைக்கு போற டைம் ரெயின் ஒன்னும் வராத படியா நான் அத பெரிசா கவனிக்கிறதே இல்லைங்கோ.

நேத்து எனக்கு நாள் முழுசா செத்த வீடுங்கோ ! ஒண்ணுமே விடியல... அதல கடவுளே இண்டைக்கு நாள் நல்லா வரட்டும் எண்டு மட்டும் மனசில நினைச்சுக் கொண்டு நான் வீட்ட இருந்து வெளிக்கிட்டு என்ர சாதாரண வேகத்தில ( 90 கீ.மீ ) துண்டி சந்தியால தபால் கட்டை செம்மணி தொட்டு பருத்துறை ரோட்ட பிடிச்சு போறத்துக்கு துண்டி சந்தியால திரும்புறேன். 

துண்டியால திரும்பினா வாற சிக்னல் லைட் கிட்ட போனாத்தான் தெரியும். அப்ப நான் அடிச்சள்ளிக் கொண்டு போகேக்க பத்து மீட்டர் இடைவெளி எனக்கும் ரெயில்வே கடவைக்கும் இருக்கேக்க "பாம் பாம்" எண்டு சிக்னல் கத்துது என்னடா கோதாரி எண்டு சிக்னல் லைட்ட பாத்தா சிவப்பு எரியுது !!!

திரும்பி யாழ்ப்பாணப் பக்கம் பாத்தா ஒன்னும் இல்ல வவுனியா பக்கம் பாக்க யாரல் தேவி "குச்சு பக்கு குச்சு பக்கு கூ..." எண்டு கூவிக்கொண்டு வாறார். சரி செத்தாண்டா சிவனாண்டி எண்டு நினைச்சுக் கொண்டு பின் பிரேக்க அமத்திக் கொண்டு முன் பிரேக்க கொஞ்சம் கொஞ்சமா அமத்தி புல்லா அமத்தி கொண்டு பின் பிரேக்க லூஸ் பண்ண......

முன்சில்லு முன் பிரேக்க புல்லா பிரேக் அடிச்ச இடத்தில நிக்குது பின் சில்லு தூக்கி 90 பாகை திரும்பி பைக் ரோட்டுக்கு குறுக்கா நிண்டுது. 

சப்பா ...............

இப்ப எனக்கும் ரெயினுக்கும் இடைல உள்ள வித்தியாசம் வெறும் 75 சென்ரி மீட்டர் தான் .............

நான் மட்டும் இண்டைக்கு அடி பட்டு இருந்தா சனம் சொல்லும் 

1. காதல் பிரச்சனை போல

2. காசு பிரச்சனையாம்

3. அப்பாவோட சண்டையாம் 

4. மூளை சரியில்லையாம் 

நியூ யப்னா காரன் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்து போடுவான், செய்தில கண் மூக்கு நாக்கு எல்லாம் வச்சிருக்கும். எவ்வளவு பிரச்சனை ??? 

பூலோகம் செலவுக்கு காசில்லாம யோசிச்சுக் கொண்டு இருக்கும் ......

நான் இண்டைக்கு தப்பினத்துக்கு காரணம் சத்தியமா சொல்லுறன் டிஸ்கவரி புரோகிராம் தான். அதில தான் சொன்னாங்கள் சடின் பிரேக் போட்டா கொன்ரோல் இல்லாம போயிடும் எண்டு !!!

இண்டைக்கு தப்பின படியா நண்பர்களே என் தொல்லை தொடரும் !!!!!! 

அந்த சீன யாரும் வீடியோ பண்ணி இருக்கோணும் ஒரு நாளல்ல மில்லியன் வியு வந்திருக்கும். சிக் அதில ஒரு CCTV காமரா இல்லாம போயிட்டு ............

09th September 2015

என் கனவு – சுஜாதாவின் வெற்றிடத்துக்கு My Dreams - Love with Action story Part -II

கனவு கலைந்து விட்டது ......
வேணாம் அந்த கனவு, அது கனவாகவே போகட்டும் ....

Thursday, March 05, 2015

என் கனவு – சுஜாதாவின் வெற்றிடத்துக்கு My Dreams - Love with Action story



என் ஆசை நாயகிக்கு நுவரெலியா ரொம்ப புடிக்கும், நாயகிக்கு புடிச்சத செய்யாட்டா நல் ஆடவனுக்கு அழகில்லையே ! செந்தில்(என் அம்மா) சொன்னது.
அதுக்காக அவளை உடன கூட்டிக்கொண்டு போக ஏலாதே வருமானமும் சரியா வரணுமே ! டிசெம்பர்(மார்கழி) போனஸ் கிடைச்சதும் அத முழுசா ஒதுக்கி வெள்ளிக்கிழமை லீவ போட்டு மூண்டு நாள் நாயகி கூட ஜாலி பிளான போட்டு நானும் அவளும் மட்டும் மழை எல்லாம் முடிஞ்ச பிறகு மார்ச்(பங்குனி) மாசம் மழை இல்லை எண்டத உறுதிப் படுத்தி வெள்ளிக்கிழமை விடியக்காலம நேரத்தோட வெளிக்கிட்டம், ஜாலிப் பயணம், நானும் அவளும் மட்டும்.
தம்புள்ள தாண்டும் மட்டும் கண்கள் முடிய படி காரின் ஜில் ஏசியில் ஹரிகரனின் இசையில் கண் அயர்ந்து குழந்தை போல வந்தாள். நித்திர மயக்கம்அவளுக்கு விடிய நேரத்தோட எழும்பினதால.
போன நான் அப்பிடியே அவளை ரசிச்சபடி போயிருக்கலாம் ஒரு இஞ்சி பிளேன் டீ குடிப்பம் எண்டு நிப்பாட்ட என்ன பூலோ(அவள் என்னை ஆசையாய் கூப்பிடும் பெயர்) நுவரெலியா வந்திட்டா எண்டு கண்விழித்தாள். நானும் அவளின் செல்லக்கதையை கேட்டபடியே இன்னும் 75% போகனும் ராசாத்தி(என் நாயகியின் செல்லப் பெயர்) சொன்ன வாறே இறங்க அவளும் என்னுடன் வந்து பிளேன் டீ குடிச்சுட்டு முகம் கழுவி பிரஷ் ஆகி வந்தாள். அவள் அழகு இரண்டு மடங்காகி இருந்தது. அவள் கண்களுக்கு நான் அடிமை.
நான்காரை ஒடட்டா பூலோ எண்டவாறே என் பதில் வார்த்தை எதிர் பாராமல் ரைவர் சீட்டில் இருந்தால், ராசாத்தி உனக்கு இங்க ஒட வராதும்மா எண்டா சரி அழகிய வதனம் இறுகிவிடும் அதனால நானும் பதில் சொல்லாமல் முன் சீட்டில் போயிருந்தேன்.
மகிந்த சேர் எங்கட வயித்தில அடிச்சு போட்ட கப்பட் ரோட் இருக்க அவள் என்னடா எண்டா சயிட் மண்ணுக்குள்ளால ஓடுறாள் ஒண்ணுமே சொல்லல வயிறுமட்டும் கலக்கிச்சு உள்ள எல்லாக் கடவுளையும் கும்பிடு எல்லாருக்கும் நேத்தி வைச்சு கொண்டு இருந்தன். ராசாத்திய கடுப்பாக்க நான் ரிலாக்ஸ் பண்ணுற மாதிரி பில்டப் குடுக்க கேட்டால் ஸ்ரீ(கோவம் வந்திட்டு அவள் றைவிங் சுப்பர் எண்டு சொல்லேல) நீங்க ஓடுறீங்களா எண்டால், அப்பா அப்பத்தான் ஒரு நிம்மதி எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லிட்டு மீண்டும் பெற்றோல நிரப்பிட்டு நுவரெலியால புக் செய்த கொடேச்ச நோக்கி மிதிச்சன். பின்னேரம் மூணு மணி போல நானும் அவளும் நுவரெலியா வந்து சேர்ந்தம். பின்னேரம் மூணு மணி எண்டாலும் குளிர் தான். புக் செய்த கோடேச் நீர்விழ்ச்சிக்கு பக்கத்தில நல்ல அமைதியான இடத்தில சுப்பர் லொக்கேசன்.
.


இனி வெளில சுத்திப்பாக்கபோகல ஏலாது எண்ட படியா இரவு சாப்பாட்டுக்கு வேண்டிய சாமானை மட்டும் இரண்டு பேரும் ஒய்யார நடை நடந்து போய் வாங்கி வந்து நான் மரக்கறி, இறைச்சிஎல்லாத்தையும் வெட்டிக்குடுக்க அவள் சுட சுட சமைத்து கொண்டு வந்தாள். உண்மையில் மதியம் சாப்பிடாததும் நல்ல ஜில் கூலும் அவள் கையால் சமைத்ததும் நாக்கில் போட்டதும் வயித்தில் டக்கெண்டு போயிட்டுது. சாப்பாடு முடிச்சிட்டு இரண்டு பேரும் பிங்கான் பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டு டீவி பாக்க சோபாவுக்கு வந்தோம். அவள் என் மடியில் தலை வைத்து படுத்திருந்து பாட்டு மிக குறைந்த சத்தத்தில் பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவள் கண் அயர்ந்து விட்டாள். அவளை அள்ளிச் சென்று கட்டிலில் போட்டு .............
(சீ சீ சீ என்ன பழக்கம் தப்பா எல்லாம் போக கூடாது. அவள் என்னவள்.) நல்ல பெட் சீட்டால் போர்த்து விட்டு நானும் கண் அயர்ந்தேன் பிரயாணம் செய்த அலுப்பு.

இன்னும் திரில்லர் வரல்ல இது என்ன லவ்சா போகுது எண்டு பாக்காதேங்க அடுத்த நாளில் இருந்து தான் புல் அக்சன் –CIA, Port City, MSS(Chinese Intelligence), SRV (Russian Intelligence) எல்லாம் வராங்க ........

இப்ப இடை வேளை