Tuesday, April 22, 2014

கிளி வாங்க - போங்க கௌதாரிமுனை 14+



வணக்கம் நண்பர்களே,
மாசக் கடைசிலயும் வேலைகள் எல்லாத்தையும் ஒதுக்கி கொஞ்சம் நிமிர்ந்து நிக்க முடியுது அதனால இந்த பதிவ அந்த கப்புக்குள்ள தாரன். இது கொஞ்சம் செக்ஸியாகவும் இருக்கும். விரும்பினா வாசியுங்க இல்லாட்டா பேசிட்டு போங்க.

உண்மைப்பயணம் நானும் அப்பாவும் துஜியும் ஜெகனும் போனது. கவர்ச்சிக்காக அவங்கள எல்லாம் அப்புறப்படுத்தி பயணிகளாக நானும் என் கனவுக் காதலி சிரேயாவும் போகப்போறம் வாறிங்களா போவம் ....

எனக்கு என் காதலி கூட நீண்ட தூரம் பயணம் செய்ய சரியான ஆசை, கன நாளா கேட்டு ஒரு ஞாயித்துக்கிழமை போறதுக்கு ஓம் எண்டாள், மோட்ட சைக்கிள்ள போறது தான் பிளான் அப்போ தானே அவ என்னைக் கட்டி புடிச்சிட்டு இருப்பாள். பட் அவ அதுக்கு ஒத்துக்கல 14 ஸ்ரீ ல தான் போகணும் எண்டாள் பிடிவாதக் காரி, சரி, எல்லாம் நன்மைக்கு தான் எண்டு நானும் காரில கிளி வாங்குற பெட்டியும் எடுத்து கொண்டு குடிக்க தண்ணியும் எண்டுத்து போட்டு கிட்டு வீட்டில தனியா தான் போறான் எண்டு சொல்லிட்டு வெளிக்கிட்டன்.

அப்பப்பா என்ன அட்வைஸ்

தம்பி சிலோவா போகணும்,
தனிய போறா நித்திர தூங்க்கினா கார ரோட்டு ஓரமா நிப்பாட்டி முகத்த கழுவிட்டு போகணும்,
அப்பிடியும் நித்திர வந்தா கொஞ்சம் நித்திர கொண்டுட்டு போகணும்
மிண்ட் ஏதாவது வாங்கி வைச்சுக்கொண்டு போகணும்
என்னவும் எண்டா கோல் எடு டா .....

ஓம் அப்பா ஓம், சரி அப்பா சரி, நான் போட்டு வாறன் அப்பா

முடியல ம்ம் ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு

இம்மிடியட்லி, படலய தாண்டின கையோட  ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்னு
"Beauty, I am leaving from Home, be ready. I will be there within 10 min"


எப்பிடி போனான் எண்டு சத்தியமா தெரியாது, நாலு நிமிஷம் இல்ல தாண்டிக்குளம் போய்ட்டன், போய் என் டாலுக்கு கோலப் போட "மெசேஸ் வருது "டோன்ட் பி ஹரி, நொவ் ஒன்லி யு செண்ட் மீ தி மெசேஜ், ஐ வில் கம் வெறி சூன்." இதுக்கு பிறகு அவள ஏதும் கேட்டா எல்லாமே பிசகிடும். பிளான் போட்டது கிட்டத்தட்ட ஒரு மாசம் முன்னாடி ஆனா அப்பிடித்தான் மெசேஸ் வரும் பொறுத்துக் கொள்ளனும் விவாதம் செய்யப் போகக் கூடாது. 

கிட்டத்தட்ட 45 நிமிச காத்திருப்புக்கு பிறகு பைங்கிளி வந்திறங்கினா, கொஞ்சம் லேட்டாகிட்டுடா ("கொஞ்சம்") எண்டு கொஞ்சும் குரல்ல சொல்லிகிட்டு, அவ்வளவும் காணுமே, நோ பேபி, இஸ்ட்  ஓகே, இட் இஸ் நாட் மச் டிலே, வில் வி மூவ். கடுப்புத்தான் இருந்தாலும் கொஞ்சும் குரல்ல சொன்ன பிறகு எப்பிடி சண்டை பிடிக்க தோணும். 

அவளுக்கு வேகமா போனாத்தான் பிடிக்கும் ஆனா வாகனம் ஏதும் இருக்க கூடாது. இருந்தா மெதுவாக தான் போக சொல்லுவாள். நான் ஒரு 80தில பிடிச்சுக் கொண்டு ஓமந்தை நோக்கி வண்டிய செலுத்தினேன். இனிய காலைப் பொழுது முகத்தில குளிர் காத்து அடிக்க காதலியின் செல்ல கதையுடன் சிரிப்பொலி வண்டி முழுதும் பரவ ஒரு இனிய காதல் பயணம் கௌதாரி முனை நோக்கி தொடங்கியது.